தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை

தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தங்கநகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் கடந்த தினங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதேநேரம் இலங்கையின் நாணயப்பெறுமதி டொலருக்கு நிகராக குறைந்த நிலையில் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் உள்நாட்டில் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.